பாவம் தமிழக பாஜக. வேறு வழியே இல்லாமல் இஞ்சின் இல்லாத,டயர் இல்லாத வண்டிகளில் பயணம் செய்ய முடிவெடுத்து விட்டது. ஆமாம் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றோடு சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம், நகைமுகனின் பாரதீய பார்வர்டு பிளாக், பி.டி.அரசகுமாரின் திராவிட விழிப்புணர்வு கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து மற்ற கூட்டணிகள் பயந்து நடுங்கும் அளவிற்கு "தேசியம் காணாத கூட்டணி" என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.
மேற்கண்ட கட்சிகளில் அதிகபட்சம் அந்தக் கட்சியின் தலைவர் மட்டும் தான் உறுப்பினராக இருப்பார்கள். அவர்களுடன் இருக்கும் ஜால்ராக்கள் கூட அவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்.இந்த நிலையில் மேற்கண்ட "தேசியம் காணாத கூட்டணி" கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீட்டு விபரத்தை இல.கணேசன் வெளியிட்டார். அதாவது சரத்குமாரின் "சமக" (சனங்க மதிக்காத கட்சி) நெல்லை, தென்காசி, நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கார்த்திக்கின் "நாமக" (நாதியற்ற மட்டமான கட்சி) விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 2 தொகுதிகளுடன், மேலும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 2 பேர் தான் கட்சியில் இருப்பதால் இன்னொரு ஆள் சேர்ந்தவுடன் தொகுதியின் பெயரும் வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்படும்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 12 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்து அதற்கு ஆள் கிடைக்காமல் திண்டாடுகிறது பாஜக.இதுல வேற இன்னும் சில தொகுதிகளில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாம் .
இந்த நிலையில் மேலும் சில விசிட்டிங் கார்டு மற்றும் லட்டர் பேடுகள் வந்தால் அவர்களுக்கும் தொகுதிகளை அள்ளி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமாரும் கார்த்திக்கும்,
எங்கள் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும். மற்ற கூட்டணி எல்லாம் சந்தர்ப்பவாத கூட்டணி. எங்களது இந்த கூட்டணி லட்சிய கூட்டணி. மக்கள் இந்த கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தருவார்கள். தமிழகத்தில் கணிசமான இடங்களில் இந்த அணி வெற்றிபெறும். தகுதியும், திறமையும் மிக்க அத்வானி நாட்டின் பிரதமராவது நிச்சயம் என்றனர்.
இந்த கூட்டணியை "ஏற்பாடு" செய்தது வேற யாரும் இல்ல. காவல்துறையையும் கருப்புச் சட்டையையும் மோத விட்டுட்டு தமிழ் நாட்டுக்கே ஆப்படிச்சாரே! அதே சூனா சாமி தான். பேசாம இந்த கூட்டணியில பிரதமர் வேட்பாளரா இருக்கிற அத்வானிய தூக்கிட்டு சூனா சாமிய போடலாம். சூனா சாமி பிரதமரா ஆனார்னா ரொம்ப நாளா இழுத்துகிட்டு கெடக்குற காஷ்மீர் பிரச்சனை முழுசா தீர்ந்திடும். ஏன்னா அப்ப காஷ்மீர் அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இருக்கும்.சூனா சாமி வாழ்க, சந்திரலேகா வாழ்க, ஏர் உழவன் வாழ்க.
11 கருத்துகள்:
இந்த கூட்டனியை பார்த்தால் பிச்சைக்காரன் பாத்திரத்தில் உள்ள கூட்டனி போல உள்ளது!
//பாவம் தமிழக பாஜக. வேறு வழியே இல்லாமல் இஞ்சின் இல்லாத,டயர் இல்லாத வண்டிகளில் பயணம் செய்ய முடிவெடுத்து விட்டது. //
nalla uvamai. siriththu vayiru punnagiyadhu
யாருங்க இது நிறைய கட்சி பேரை போட்டு இருக்கீங்க. இப்பதான் கேள்வி படறேன்.
படிக்க நல்லாதான் இருக்கு
tamasho tamashu
//தேசியம் காணாத கூட்டணி//
அண்ணே கரேக்டா தான் பேரு வச்சுருக்காங்க...
இப்படி ஒரு கூட்டணி இருக்குனு ரிஷி க்கு மட்டுமில்ல நாட்டுல யாருக்குமே தெரியாதுல்ல அதான்..
// பெயரில்லா கூறியது...
இந்த கூட்டனியை பார்த்தால் பிச்சைக்காரன் பாத்திரத்தில் உள்ள கூட்டனி போல உள்ளது!//
அதே அதே
// பெயரில்லா கூறியது...
//பாவம் தமிழக பாஜக. வேறு வழியே இல்லாமல் இஞ்சின் இல்லாத,டயர் இல்லாத வண்டிகளில் பயணம் செய்ய முடிவெடுத்து விட்டது. //
nalla uvamai. siriththu vayiru punnagiyadhu//
நன்றி சாரே
// ரிஷி (கடைசி பக்கம்) கூறியது...
யாருங்க இது நிறைய கட்சி பேரை போட்டு இருக்கீங்க. இப்பதான் கேள்வி படறேன்.
படிக்க நல்லாதான் இருக்கு//
உங்களுக்கு ஒன்னுமே தெரியலங்க! ஐய்ய இன்னமும் சின்னப்புள்ளையாவே இருக்கிறீங்க. எல்லாமே லட்டர்பேடுக தான்
// Senthil கூறியது...
tamasho tamashu//
Thanks so Thanks
// ராசா கூறியது...
//தேசியம் காணாத கூட்டணி//
அண்ணே கரேக்டா தான் பேரு வச்சுருக்காங்க...
இப்படி ஒரு கூட்டணி இருக்குனு ரிஷி க்கு மட்டுமில்ல நாட்டுல யாருக்குமே தெரியாதுல்ல அதான்...//
ஆமாண்ணே! ஆமா!தேங்ஸ்ணே!
கருத்துரையிடுக