தமிழகத்தில் பலவகையில் சிதறிக்கிடந்த முஸ்லீம் மக்களை ஒன்று திரட்டி 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு சமுதாய இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் இன்றுவரை குறைசொல்ல முடியாத அளவிற்கு அளப்பறிய பணிகளையாற்றி வருகிறது. உதாரணமாகச் சொல்லப்போனால் உயிர்காக்கும் இரத்த தானத்தில் இருந்து அவசரகால ஊர்திகள் வழங்குதல் போன்ற மருத்துவம் மற்றும் உயிர்காக்கும் பணிகளை செய்து வருவது யாராலும் மறுக்கமுடியாது.
ஆம்புலன்ஸ் என்றாலே என்ன என்று தெரியாத குக்கிராமங்களில் கூட தமுமுகவின் சேவையால் இப்போது அங்கெல்லாம் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆம்புலன்ஸ் சேவையால் முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் எல்லா சமுதாய மக்களும் பேதமின்றி பயனடைவதைக் கண்கூடாக காணமுடிகிறது.இது போன்ற சமுதாயப் பணிகளில் தமுமுகவை முன்னிறுத்தி வந்த அதன் தலைவர்கள் குறிப்பாக திரு.ஜவாஹிருல்லா மற்றும் திரு.ஹைதர் அலி ஆகியோர் மிகமிக ஆசையோடு தமுமுக என்னும் சமுதாய இயக்கத்தை சாக்கடையில் இறக்க முடிவு செய்து அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார்கள்.
அவர்களின் இலக்கு கலைஞரை கவுத்தி சீட் வாங்கவேண்டும் என்பதே.அதற்கான முயற்சிகளில் முழுமூச்சாய் இறங்கியது தமுமுக தலைமை.கலைஞரை கவுக்க சிறந்த வழி என்ன? பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தைக் கையாண்டு இடஒதுக்கீட்டுக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் கலைஞருக்கு நேரு உள்விளையாட்டு அரங்கிலே பிரம்மாண்ட பாராட்டுவிழாவை நடத்தி கலைஞரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். மேற்கண்ட தலைவர்களின் ஒரே குறிக்கோள் எப்படியாவது M.P ஆவது தான். அதற்காகவே உருவாக்கப்பட்டது தான் மனித நேயமக்கள் கட்சி.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டநிலையில் தங்கள் கட்சிக்கு 6 தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது எனவே 6 தொகுதிதரும் கட்சிகளுடன் கூட்டணி என்று கோசத்துடன் களமிறங்கியது மமக.இவர்களின் கணக்கு 6 கேட்டால் இரண்டாவது தருவார்கள் என்பது தான்.அதன்படி கலைஞரிடம் பேச்சி வார்த்தைக்குப் போயும் பேரம் படியவில்லை. காற்றிலே வெண்ணை எடுத்து நூலே இல்லாமல் கயிறு திரிக்கும் கலைஞர், தான் முன்பு காயிதேமில்லத் அவர்களுக்கு செய்து கொடுத்த சத்தியப் பிரமாணப்படி ஒரு சீட் தான் தரமுடியும் என்று சொல்லி இவர்களை வெளியே தள்ளி கதவைச்சாத்திவிட்டார். இவர்கள் ஒரு சீட்டில் போட்டியிடக்கூடத் தயார்தான்.ஆனால் அந்த ஒரு சீட்டு யாருக்கு என்பது பற்றி மேற்கண்ட தலைவர்களிடையே சண்டை வந்து விடும் என்பதால் தான் ஒரு சீட்டை மறுத்தார்கள்.ஜெயலலிதாவும் இவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில் தற்போது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் கிருஷ்ணசாமியின் புதிய் தமிழகம் ஆகிய லட்டர்பேடுகளோடு இணைந்து மயிலாடுதுறை,இராம நாதபுரம்,தென்சென்னை ஆகியவற்றில் போட்டியிடுகிறார்கள்.
நாம் நினைத்தது போலவே மத்திய சென்னையில் திரு.ஹைதர் அவர்களும், மயிலாடுதுறையில் திரு.ஜவாஹிருல்லாவும், இராம நாதபுரத்தில் திரு.சலீம் கான் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.அதாவது இவர்களின் லட்சியத்தை அப்பாவித் தொண்டர்களின் மீதேறி நிறைவேற்றிக் கொள்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் தமுமுக எனும் சமுதாய இயக்கத்திற்கு குழிதோண்டும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள் என்பது உறுதி. மமக ஆரம்ப விழாவில் மமக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் செலவை தமுமுகவே ஏற்றுக்கொள்ளூம் என்ற ஒரு சூசக பாயிண்டையும் போட்டு கடைசியில் நாங்கள் தான் அந்த வேட்பாளர்கள் எங்களுக்கு தமுமுகவே செலவு செய்யும் என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் சூத்திரதாரிகள்.
சினிமா நடிகர்கள் என்றாலே உவ்வே என சொல்லி வந்த தமுமுக தலைவர்களுக்கு இன்று சரத்குமார் ஒரு நடிகராகத் தெரியாதது ஏனோ? இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்பதாலா? அது சரி சாக்கடையில் விழுந்த பிறகு பன்றி என்ன எறுமை என்ன, எல்லாமே கருப்புத் தான் எல்லாமே கருப்புத் தான் கருப்புத்தான் கருப்புத்தான்.
பாவம் தமுமுகவின் அப்பாவித் தொண்டர்கள். பார்க்கலாம் மக்கள் எந்த அளவிற்கு விழிப்புடன் இருக்கிறார்கள் என்று.
-C.I.D சிங்காரம்
பின்குறிப்பு: இந்தப் பதிவு குறித்த தகவல்களை எனக்கு மெயில் மூலம் வழங்கிய தமுமுகவின் தொண்டர் (தவ்ஹீத் ஜமாத் தொண்டர் அல்ல) மற்றும் என் நண்பருக்கு என் மணமார்ந்த நன்றிகள்
UPDATE TODAY : "அதிசய உலகம்" குவைத்தின் கொஞ்சும் அழகைக் காண அதிசய உலக பட்டியில் கிளிக்குங்கள்
UPDATE TODAY : "களம் 2009" C.I.D சிங்காரத்தின் செய்தி சேகரிப்பில் வெற்றிவாய்ப்புகள், காண களம் 2009 பட்டியைக் கிளிக்கவும்
8 கருத்துகள்:
இவர்கள் {ம ம கட்சி} விரல் விட்டு எண்ணும் அளவிற்க்கு ஓட்டு பெருவார்கள் . தலைவர் எம் பி பதவிக்கு நாக்கை தொங்கபோட்டு அழைகிறார், பொது செயலர் ஏற்கனவே விசா வியாபாரி பலரை.............,
இவர்கள் தான் சமுதாய்த்திற்க்கு நல்லது செய்யபோகிறார்களாம்! ,இவர்கள் சமுதாய துரோகிகள் .
பாவம் தமுமுக தொண்டர்கள் {சகோதரர்கள்}
இப்படிக்கு ஜலால் திருப்பூண்டி
jalamath@gmail.com
த.த.ஜ-வில் எத்தனையோ மாநில நிர்வாகிகள் இருக்க, நிர்வாகத்தில் இல்லாத இவர் சென்று சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
என்ன பணிவா உட்காந்திருக்காரு, அடாடா, பணிவு இருக்குறதுலா டாக்டர் பட்டம் வாங்குனா, நம்ம ஓ.பி.எஸ். இந்த அண்ணாச்சிகிட்டே தோத்து போயிட்டாரே...
இந்த போட்டவே எல்லாரும் பாருங்களேன்.
http://www.tntj.net/Statement/CM_Meet_08-04-2009.asp
சொந்த புத்தி இல்லாத கபாலி அடுத்தவன் செய்த வாந்தியை அப்படியே எடுத்து சாப்பிட்டு விட்டு நீயும் பெரும் வாந்தி எடுத்தது போல் உள்ளது . உன்னுடய பதிவு .
எனக்கு சொந்த புத்தி இல்லையென்று சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி. ஆனால் தமுமுக தலைவர்கள் தங்கள் சொந்த புத்தியால் தொண்டர்களின் தலையில் ஏறி நிற்கிறார்கள். ஏன் திரு.ஜவாஹிருல்லாவையும்,திரு. ஹைதரலியையும் விட்டால் வேறு ஆளே இல்லையா? ஏன் உங்கள் இயக்க வழக்கறிஞர் அணி மற்றும் மாணவர் அணித்தலைவர் திரு.ஜெயினுலாப்தீன் நன்கு படித்த ஒரு வக்கீல் தானே! இன்னும் எத்தனை பேர் பட்டியல் வேண்டும். தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கத்தில் திரு.பாக்கர் அவர்கள் மீது மட்டும் திரும்பத்திரும்ப காசுப் புகார்கள் வந்து அவரை நீக்கியது போல உங்கள் கழகத்தின் நிரந்தரத் தலைவர் மற்றும் நிரந்தரப் பொதுச்செயலாளர்களையும் நீங்களே நீக்கும் காலம் வரும் தலைவரே!
பீ ஜே உட்பட இவர்கள் யாவரும் சொல்வேறு செயல்வேறு கோஷ்டி.
இப்படி சொல்லும் செயலும் மாறாக இருப்பதற்கு இஸ்லாத்தில் வேறு பேர் சொல்வார்கள், அது கேவலமானது.
இறைவன் பெரியவன் என்பதை நாவளவில் சொல்வார்கள். நடத்தையில்
தான் தான் பெரியவன் என்று இறுமாப்புடன் அலைவார்கள். இந்த தாந்தோன்றித்தனமான தலைவர்களைப் புறக்கணித்துச் சென்றால் முஸ்லிம் சமூகம் உருப்படும்.
போங்கடா, போய் புள்ளக்குட்டிகளை படிக்க வைங்க என்று இந்தச் சமுதாயத்தைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.
அன்பார்ந்த சகோதரரே, எல்லாரும் அரசியலில் சேர்ந்தபின் தான் சூத்திரதாரிகளாக ஆகமுடியும், ஆனால் இவர்கள் சூத்திரதாரிகளாகவே நுழைந்திருக்கின்றார்கள்,
மத்திய சென்னையை தென் சென்னை என்று எழுதுபவர் சி.ஐ.டியாக இருக்க முடியாது. சிறுபிள்ளையாகத் தான் இருக்க வேண்டும்.
enna kodumai saravana
கருத்துரையிடுக